Pages

Thursday, November 8, 2012

URANGA PULI TREE AT ALWARTHIRUNAGARI TEMPLE


URANGA PULI AT Arulmigu Sri Nammalwar Koil, Alwarthirunagari

Wednesday, October 24, 2012

குலசேகரன்பட்டினம் - KULASEKARANPATTINAM

குலசேகரன்பட்டினம் :


தமிழகத்தில் மைசூருக்கு நிகராக சுமார் பத்து லட்சம் முதல் 15 லட்சம் வரை கூடி வழிபடும் இடம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் ஆகும். இத் தலம் கடந்த 25 ஆண்டுகளில் மிக அபரிதமான வளர்ச்சி கொண்டுள்ளது.அறுபடை வீடான திருச்செந்தூரிலிருந்து 13 கிமீ தூரத்தில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் குலசேகரன்பட்டினம் என்ற கடற்கரை கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.தென் தமிழக
த்தில் சிறந்து விளங்கும் சக்தி தலங்களில் இது ஒன்றாகும்.இங்கு அம்மையும் அப்பனுமாக ஸ்ரீஞான மூர்த்தீஸ்வரரும் ஸ்ரீமுத்தாரம்மனும் சேர்ந்து சுயம்பாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.

இயற்கை துறைமுகமாகவும் முன்பு ஏற்றுமதி இறக்குமதி போன்ற வணிகத்திற்கு துணையாக இருந்த நகர் தற்போது ஊராட்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் தொகையுடன் உள்ளது. அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இந்நகர் வழியாக பாண்டிய மன்னர்கள் இறக்குமதி செய்ததாகவும், இலங்கை மன்னனை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாக நாடு திரும்பியதாகவும் புராணம் கூறுகிறது. குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் திருக்காட்சி அளித்ததால் மன்னன் பெயராலேயே குலசேகரன் பட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

1934ஆம் வருடத்திற்கு முன் இப்போது வழிபடும் மூல விக்ரகங்கள் இல்லை. சுயம்புவாக தோன்றி சுவாமி மற்றும் அம்மன் விரகங்களே இருந்தன. சுவாமி அம்மன் பெரிய திருவடி அமைத்து வழிபட பக்தர்கள் எண்ணிய போது கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி குமரி மாவட்டம் மைலாடியில் சென்றால் உங்கள் எண்ணம் ஈடேறும் என்று வழிகாட்டியுள்ளார்.இதே போன்று மைலாடியிலுள்ள சுப்பையா ஆசாரி கனவிலும் தோன்றி ஒரே கல்லில் ஒரே பீடத்தில் சுவாமி அம்மனை அருகருகே அமைந்துள்ள ஆண்பாறை மற்றும் பெண் பாறையில் வடித்திடு என்றும், அதற்கான பாறை தெற்கு நோக்கி சென்றால் கிடைக்கும் என்றும் அவ்வாறு வடித்ததை குலசை மக்களிடம் வழங்கிடு என்றும் அம்மன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அம்மனே தேர்ந்தெடுத்த திருமேனிதான் இன்றும் பக்தர்கள் கோவிலில் வழிபடுகின்றனர்.இதே போன்று 17.10.1927ல் கோவிலில் அமைத்து இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும் கோவில் மணியையும் அம்மனே ஏற்பாடு செய்ததுதான் என்கின்றனர்.குலசேகரன்பட்டினம் மலையன் தெருவில் மளிகை கடை நடத்தி வந்த சுப்பையா பிள்ளை கனவில் தோன்றிய அம்மன் அவரது கடைக்கு மறுநாள் வரும் உளுந்து மூட்டையில் இருக்கும் பணத்தைக் கொண்டு கோவிலுக்கு ஆலயமணி செய்து வைக்க பணித்தார்.அவ்வாறே மறுநாள் நடந்ததால் அம்மன் பணித்தபடி அவர் 35 படி கொள்ளவு கொண்ட 56 கிலோ எடையுள்ள மணியை வாங்கி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு தெரிவிக்கிறது.

பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துக்களே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக வழிபட்டனர். அம்முத்துக்கள் அம்பாளாக திருமேனி கொண்டன. முத்துக்களிலிருந்து அம்மன் உதித்ததால் முத்தாரம்மன் என அம்மன் அழைக்கப்படுகிறார்.

இஙகு நவராத்திரி திருவிழாதான தசராத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.புரட்டாசி மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் பிரமை திதியில் கொடியேற்றி 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது.அம்மன் தினசரி பல்வேறு கோலத்தில் காட்சி தருவார்.பத்தாம் திருவிழா அதாவது தசரா தினத்தன்று அம்மன் மகிசாசுர வர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிறான். அந்த நாள்தான் தசரா திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.

முன்பு குலசேகரன்பட்டினம் ஊருக்குள் நெருக்கமான சந்தில் நடைபெற்ற மகிஷாசூர சம்ஹாரம் தற்போது கடற்கரையில் சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு நடைபெறுகிறது.இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் பத்து நாட்கள் முதல் 40 நாட்கள் வரை விரதம் இருந்து வேடமிட்டு காணிக்கை பெற்று திருக்கோவிலில் சேர்க்கின்றனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 10 முதல் 15 லட்ச பக்தர்கள் தசரா திருவிழாவின்போது குவிகின்றனர்.முன்பு மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தசரா குழுக்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும். இப்போது ஆயிரக்கணக்கான குழுக்கள் வேடம் தரித்து வந்து கலந்து கொள்கின்றன.


தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகியது, விஜயதசமி ஆன இன்று அனைவரும் குலசை கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.


நன்றி :Discover Islam

Wednesday, September 12, 2012

ஆசிரியர்களை நினைவு கூறுகிறேன்

ஆசிரியர்களை நினைவு கூறுகிறேன் 

எனது ஆரம்ப கல்வி ஆழ்வார்திருநகரி ஸ்ரீ சுப்ரமணிய வித்யாலய தொடக்கப் பள்ளியில். ஆசிரியப்பெருந்தகைர்கள் வரிசையில் திருவளர்கள் ராகவன், மைதிலி, சங்கரி, ஆகியோர் நினைவு கூறத் தக்கவர்கள். இன்றும் மதிப்பு மிக்கவர்களாக உள்ளார்கள். 

நண்பர்கள் வரிசையில் முதல் வகுப்பில் இருந்து பண்ணிறேன்டம் வகுப்பு வரை தோழர்களாக இருந்தவர்கள் திருநாவுக்கரசு, குமார், அழகு, பரமேஸ்வரன் ஆகியோர் ஒன்று முதல் பத்து வரை ஒரே வரிசையில் அமர்ந்து படித்தோம். 

உயர்நிலை கல்வியை ஆழ்வார்திருநகரி ஹிந்து மேல் நிலை பள்ளியில் தொடர்ந்தேன். ஆசிரியப்பெருந்தகைர்கள் வரிசையில்  
கோபால், மணி, லக்ஷ்மணன், தெய்வசிலை, வரதேசிகன், பக்ஷிராஜன், ரோசம்மா டீச்சர், ஆதிலட்சுமி டீச்சர் , ஆகியோர் இன்றும் மதிப்பு மிக்கவர்களாக உள்ளார்கள். 

கணக்கு தனி பயிற்சி ஆசிரியர் கண்ணன் சுவாமிகள் மிகவும் மதிப்பு மிக்க குடும்பத்தை சார்ந்தவர், நன்கு கணக்கு கற்று கொடுத்தார். பிளஸ் ஒன் வகுப்பில் புதிதாக வந்தவர் எமெர்சன் . இன்று வரை நண்பர்களுடன் நல்ல நட்பு உள்ளது.

 பிளஸ் டூ முடித்தபின் கல்லூரி வாழ்க்கை நாசரேத் மர்காசிஸ் கல்லூரியில் வேதியியல் துறையில் தொடர்ந்தேன். தமிழ் வழியில் கற்ற நான் 
ஆங்கில வழியில் கற்க சிரமப்பட்டேன். இங்கு ஆசிரியப்பெருந்தகைர்கள் வரிசையில் ஜானெட், பிரின்ஸ், பாஸ்கர், காசிராஜன், ...........
நண்பர்களாக மோசேஸ், மேரிட்டோன், அருள்ராஜ், சேர்மதுரை, அகஸ்டின், சித்ரமதி சோனியா, எப்சிபா, விஜயா, வள்ளிநாயகம், .........
இதில் நண்பர் அகஸ்டின் தற்போது இல்லை. 
ஆண் நண்பர்களுடன் நட்பு உள்ளது. 




Wednesday, August 22, 2012

ARULMIGU THITTU MUTTU SASTHA KOVIL

ARULMIGU THITTU MUTTU SASTHA KOVIL 
அருள்மிகு திட்டு முட்டு சாஸ்தா திருக்கோவில் முகப்பு வாயில் 

Situated in river belt of Tamirabarani in Autoor (Thoothukkudi District). Tiruchendur is 23 KM towards south and Thoothukkudi is 20 KM towards North. 

Thursday, June 21, 2012



NAMMALWAR






எனது நண்பரகள் (1988) - மதுரை