ஆசிரியர்களை நினைவு கூறுகிறேன்
எனது ஆரம்ப கல்வி ஆழ்வார்திருநகரி ஸ்ரீ சுப்ரமணிய வித்யாலய தொடக்கப் பள்ளியில். ஆசிரியப்பெருந்தகைர்கள் வரிசையில் திருவளர்கள் ராகவன், மைதிலி, சங்கரி, ஆகியோர் நினைவு கூறத் தக்கவர்கள். இன்றும் மதிப்பு மிக்கவர்களாக உள்ளார்கள்.
நண்பர்கள் வரிசையில் முதல் வகுப்பில் இருந்து பண்ணிறேன்டம் வகுப்பு வரை தோழர்களாக இருந்தவர்கள் திருநாவுக்கரசு, குமார், அழகு, பரமேஸ்வரன் ஆகியோர் ஒன்று முதல் பத்து வரை ஒரே வரிசையில் அமர்ந்து படித்தோம்.
உயர்நிலை கல்வியை ஆழ்வார்திருநகரி ஹிந்து மேல் நிலை பள்ளியில் தொடர்ந்தேன். ஆசிரியப்பெருந்தகைர்கள் வரிசையில்
கோபால், மணி, லக்ஷ்மணன், தெய்வசிலை, வரதேசிகன், பக்ஷிராஜன், ரோசம்மா டீச்சர், ஆதிலட்சுமி டீச்சர் , ஆகியோர் இன்றும் மதிப்பு மிக்கவர்களாக உள்ளார்கள்.
கணக்கு தனி பயிற்சி ஆசிரியர் கண்ணன் சுவாமிகள் மிகவும் மதிப்பு மிக்க குடும்பத்தை சார்ந்தவர், நன்கு கணக்கு கற்று கொடுத்தார். பிளஸ் ஒன் வகுப்பில் புதிதாக வந்தவர் எமெர்சன் . இன்று வரை நண்பர்களுடன் நல்ல நட்பு உள்ளது.
பிளஸ் டூ முடித்தபின் கல்லூரி வாழ்க்கை நாசரேத் மர்காசிஸ் கல்லூரியில் வேதியியல் துறையில் தொடர்ந்தேன். தமிழ் வழியில் கற்ற நான்
ஆங்கில வழியில் கற்க சிரமப்பட்டேன். இங்கு ஆசிரியப்பெருந்தகைர்கள் வரிசையில் ஜானெட், பிரின்ஸ், பாஸ்கர், காசிராஜன், ...........
நண்பர்களாக மோசேஸ், மேரிட்டோன், அருள்ராஜ், சேர்மதுரை, அகஸ்டின், சித்ரமதி சோனியா, எப்சிபா, விஜயா, வள்ளிநாயகம், .........
இதில் நண்பர் அகஸ்டின் தற்போது இல்லை.
ஆண் நண்பர்களுடன் நட்பு உள்ளது.
No comments:
Post a Comment